Rjpmguru's Blog

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே !!!

மே தின நல்வாழ்த்துக்கள் April 30, 2010

Filed under: நண்பர்களுக்காக,Uncategorized — செந்தில்குரு பூசாரி @ 11:25 PM
Tags:

மே தின நல்வாழ்த்துக்கள்

என்ன நண்பர்களே நலமா !

என்ன மாதிரி விடிய விடிய உக்காந்து தட்டச்சு செய்து (நம்புங்கப்ப !)  பதிவு போடுற நண்பர்களுக்கும், அந்த படிக்குற நண்பர்களுக்கும் எனது மே தின நல்வாழ்த்துக்கள்.

உங்கள்

Advertisements
 

இயற்கையோட விளையாடினா? April 6, 2010

Filed under: பொது — செந்தில்குரு பூசாரி @ 11:15 PM
Tags:

வணக்கம்!
நம்ம தமிழ்நாட்டுலே ஒரு பழமொழி இருக்கு. ” முள்ளுலே சேலை மாட்டினாலும், சேலைல முள்ளு மாட்டினாலும், சேதாரம் சேலைக்கு தான் “ அதே போலதான் ” இயற்கையோட விளையாடினலோ, இல்ல இயற்கை நம்ம கூட விளையாடினலோ சேதாரம் நம்மளுக்கு தான்.” அது தெரியாம விரோதிகள் சிலர் விளையாடுரங்க…
நம்மாலே மரங்களை வளர்கத்தான் முடியலே, இருக்குற மரங்களை பாதுகாப்போம்.
இந்த செய்தியை படிங்க உங்களுக்கு புரியும்.
பற்ற’ வைத்தால் சுற்றமும் அழிந்து போகுதே : யோசிக்கத்தானே இருக்குது ஆறறிவு

Human Intrest detail news

ஊட்டி : வனப்பகுதிகளில் வைக்கப்படும் தீயால், மண் வளம் குறைந்து, அரிய வகை உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பனி காலம் முடிந்து கோடைகாலம் துவங்கியுள்ளதால், காலநிலை மாறி வெயில் சுட்டெரிக்கிறது; வனங்களில் பசுமைக் குறைந்து, அவ்வப்போது தீ பிடித்து வருகின்றன. பெரும்பாலும் செயற்கையாக தீ வைக்கப்படுவதால், வனப்பகுதிகள் நாசமடைகின்றன;

வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட சீகூர் வனப்பகுதியில் தீ வைத்தது தொடர்பாக, ஊட்டி அருகேயுள்ள எப்பநாடு தூனேரி பகுதியை சேர்ந்த கார்த்திக் (24), மூர்த்தி (20) ஆகியோரை, வனத்துறையினர் கைது செய்தனர். ‘வனத்துக்கு தீ வைப்போர் மீது வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் வன உயிரின சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, வனத்துறை எச்சரித்துள்ளது; நடப்பாண்டு இதுவரை, 10 இடங்களில் தீ ஏற்பட்டு 51.70 எக்டேர் வனப்பரப்பு நாசமானது.கடந்த 24ம் தேதி, ஊட்டி மேல் கோடப்பமந்து பகுதியில் உள்ள கோடப்பமந்து காப்பு காட்டில், திடீரென தீ ஏற்பட்டது; காற்று மற்றும் காய்ந்திருந்த கோத்தகிரி மலர் மற்றும் உண்ணி செடிகளால், தீ வேகமாக பரவியது. 10 ஏக்கர் வனப்பரப்பு எரிந்து நாசமானது.

ஊட்டி எல்க்ஹில், சர்ச்ஹில் மற்றும் எச்.பி.எப்., பகுதிகளிலும் தீ ஏற்பட்டது. வனங்களில் தீ ஏற்படுவதால், வனத்துக்கே சொந்தமான வளங்கள் பாதிக்கப்படுகின்றன.ஜனவரி முதல் மே மாதம் வரை, குருவி, காட்டுக் கோழி உட்பட பறவை இனங்களின் இனப்பெருக்க காலமாக உள்ளது. சிறு செடிகள் மற்றும் பதுங்குக் குழிகளில் வசிக்கும் இவை, பரவும் தீயால், முட்டைகள் உடைந்து, இனப்பெருக்கத்தில் சிக்கல் ஏற்படுகிறது. ஓணான், பாம்பு உட்பட ஊர்வனவற்றுக்கும் இதே பாதிப்பு தான். ஓரிடத்தில் தொடர்ந்து தீ ஏற்படும் பட்சத்தில், மண்ணில் உள்ள நுண்ணுயிர் பாதித்து, சத்துகள் குறைந்து விடும்; மண் இறுகி, தாவரங்கள் மற்றும் சோலை மரங்கள் வளராது. முயல், நரி, செந்தாய் உட்பட மண்ணில் பொந்து அமைத்து வசிக்கும் உயிரினங்களும் படிப்படியாக அழிந்து விடும். இது ஒரு புறம் இருக்க, வனம் ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் சிலர், அருகேயுள்ள புல்வெளிகளுக்கு தீ வைத்து, நிலத்தை ஆக்கிரமித்து விவசாயத்தில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

‘நெஸ்ட்’ அறக்கட்டளை நிறுவனர் சிவதாசிடம் கேட்டபோது கூறுகையில், ”வனத்தில் தீ என்பது, 95 சதவீதம் இயற்கையாக ஏற்படுவது கிடையாது. மூங்கில் வனம் உள்ள பகுதிகளில், காய்ந்த மூங்கில்கள் உரசும் போது மட்டுமே தீ ஏற்பட வாய்ப்புள்ளது. புகைப்பிடிக்கும் சிலர், வனப்பகுதி வழியே பயணிக்கும் போது, வீசி எறிவதால், தீ ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், சுற்றுலாவுக்கு வரும் சிலர், வனப்பகுதி அருகே சமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாலும், ‘பயர் கேம்ப்’ல் மூழ்கும் இளைஞர்களாலும் தீ பரவுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என வனத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்தும், எச்சரித்தும், தொடர்ந்து வருவது கவலையளிக்கிறது. விதிமீறலில் ஈடுபடுவோர் மீது வனத்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மலை மாவட்டத்துக்கு அழகு சேர்க்கும் வனங்களை அழிக்காமல் இருந்தால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்,” என்றார்.

வனத்துக்கு தீ வைப்போர் மீதும், ஆக்கிரமிப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, வருங்காலங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க முடியும்.

நன்றி : தினமலர் நாளிதழ்

நண்பா !
நான் ஏரியாக்கு(வலை பூக்கு) புதுசு. உங்கள் கருத்தே எனக்கு விஜயம்.!
உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்.