Rjpmguru's Blog

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே !!!

திருவாசகம்-4 August 23, 2010

Filed under: Uncategorized — செந்தில்குரு பூசாரி @ 1:34 PM

குருநாதசுவாமி துணை 
அன்பு நண்பர்களே !
                    வணக்கம் ! வெகு  நாட்களுக்கு பிறகு திரும்ப எழுத ஆரம்பிக்கேறேன். உங்களின் ஆதரவு எப்பொழுதும் எனக்கு வேணும். உங்களுக்கு புடிச்சு இருந்த உங்க கருத்தை சொல்லுங்க…….
 
மாணிக்கவாசகர் அருளிய 
 திருவாசகம் 
 
திருசிற்றம்பலம்   
 
நூல் அமைப்பு ஆரம்பம்….
 
                          திருவாசகம் ஐம்பத்தொரு திருப்பதிகங்களுடன் திகழ்கிறது. அவைகளில் அடங்கியுள்ள பாடல்களின் தொகை அறுநூற்று ஐம்பத்தாறு. நூலில்  அடங்கியுள்ள பதிகங்களுள் பலவற்றை நாம் இடம் மாற்றியமைத்தால் இழுக்கு ஒன்றும் வாராது. ஏனென்றால் ஏதேனும் ஒரு தனி விஷயத்தை ஆராய்ச்சி செய்யவோ, படிப்படியாக அதை விளக்கிக்கொண்டு போவதர்காகவோ இந்நூல் முழுதும் முறைவைத்து அமைக்கப்படவில்லை. ஆயினும் அப்பதிகங்கள் அறவே தாறுமாறாகக் கலங்கிக் கிடக்கின்றனவென்று இயம்புதற்கும் இடம்மில்லை. சிவபுராணம் முதன்மை பெறுவது முறையே. தத்துவ விளக்கத்தில் அது அலைசிறந்து நிற்கிறது. அதைத் தொடர்ந்து வரும் மூன்று அகவல்களும் முறையாக இடம் பெற்றிருக்கின்றன. சாதனங்களின் சீரிய பகுதிகள் திருச்சதகத்தில் அடங்கியிருக்கின்றன. அவைகள் தத்துவ விளக்கத்தைத் தொடர்ந்து வருவது தகும். நீத்தல் விண்ணப்பம் அதன் பின் வருவதிலும் பொருள் புதைந்திருக்கிறது. ஏனைய பதிகங்களோல்லாம் எப்படி வேண்டுமானுலும் இடம் வகிக்கலாம்.
 
                        திருவாசகத்தின் அமைப்பை ஊர் உயர்ந்த மழைத் தொடரின் முடிமீது நடந்து போவதோடு ஒப்பிடலாம். நீண்ட மலைத்தொடரின் முடி ஒரே ஒப்பமாயிருப்பதில்லை. செங்குத்தான சிகரங்களும் தாழ்வுற்ற மழைப் பகுதிகளும் மாறிமாறி வந்து கொண்டிருக்கின்றன. மலையின் முதுகில் மேடும் பள்ளமும் பின்னிப் பின்னிப் பொலிவது இயற்கையின் கூறு எனலாம். திருவாசகத்தில் சிவபுராணம் மகாமேரு போன்று ஒரே செங்குத்தாயிருக்கேறது. அதைப்  பூலோகக் கயிலாயம் எனலாம். கிட்டத்தட்ட அதே உயரத்தில் இருக்கின்றன மற்ற முன்று அகவல்களும் பின்பு மலைத் தொடர்பு படிப்படியாக கீழே வருகிறது. அதில்  ஏறுவதும் கீழே இறங்குவதும் மாறி மாற்றி நிகழ்கின்றன. மனிதனுடைய ஆத்ம சாதனமும்  நிகழ்கிறது. திருவாசகத்தின் இறுதிப் பகுதி திரும்பவும் மேல் நோக்கிப் போகிறது. சீவ உபாதி ஒலித்தல் என்னும் திருப்படை ஆட்சிப் பதிகம் துவக்கத்தில் இருக்கிற சிவபுராணத்துக்கு நிகராக உயர்நிலை யொய்துகிறது. அதை அத்வைத சித்தி என்று இயம்புவது முறை. முடிவில் ஆனந்த மாலையும் அச்சோப்பதிகமும் கீழிறங்கி வருவனவாகின்றன.  
                                                                                                                                                                    ….. தொடரும்.
திருசிற்றம்பலம்.
 
 
 குருநாதர் அருள் பணியில் 
உங்கள் 
 
செந்தில்குரு
குருநாதன் கோவில் பூசாரி.
ராஜபாளையம்.
Advertisements
 

மே தின நல்வாழ்த்துக்கள் April 30, 2010

Filed under: நண்பர்களுக்காக,Uncategorized — செந்தில்குரு பூசாரி @ 11:25 PM
Tags:

மே தின நல்வாழ்த்துக்கள்

என்ன நண்பர்களே நலமா !

என்ன மாதிரி விடிய விடிய உக்காந்து தட்டச்சு செய்து (நம்புங்கப்ப !)  பதிவு போடுற நண்பர்களுக்கும், அந்த படிக்குற நண்பர்களுக்கும் எனது மே தின நல்வாழ்த்துக்கள்.

உங்கள்

 

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் April 13, 2010

Filed under: Uncategorized — செந்தில்குரு பூசாரி @ 11:28 PM

வணக்கம் நண்பர்களே,

இன்னைக்கு சித்திரை முதல் நாள் அதனால

எனது இனிய தமிழ்  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் ….

 

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்…. April 4, 2010

Filed under: Uncategorized — செந்தில்குரு பூசாரி @ 11:29 PM

நண்பர்களுக்கு வணக்கம்,
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்….