Rjpmguru's Blog

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே !!!

திருவாசகம் April 21, 2010

Filed under: திருவாசகம் — செந்தில்குரு பூசாரி @ 12:22 AM
Tags:

குருநாதசுவாமி துணை

அன்பு நண்பர்களே !

எனக்கு திருவாசகம் எழுதனும்னு நினைத்தேன். இப்போதான் அது நிறைவேரிருக்கு . எழுத ஆரம்பிச்சு இருக்கேன். உங்களின் ஆதரவு எப்பொழுதும் எனக்கு வேணும். உங்களுக்கு புடிச்சு இருந்த உங்க கருத்தை சொல்லுங்க…….

அருளிய

திருவாசகம்

திருசிற்றம்பலம் !

வாதவூரர் வரலாறு

மாணிக்கவாசகர் மதுரைக்கு பக்கத்தில் உள்ள திருவாதவூரில் பிறந்தார். ஆதலால் அவருக்கு திருவாதவூரர் என்னும் பெயர் அமைந்தது. அவருடைய கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் ஆகிய சிறப்புக்களை பற்றி கேள்விவுற்ற பாண்டி மன்னன் அவரை தன்னிடம் வர வழைத்து அவரை தனது மந்திரிமார்களில் ஒருவராக நியமித்து கொண்டான். மேலும் அவருடைய ஆட்சி திறமையை . கண்டு கொண்ட கோமகன் அவருக்கு ” தென்னவன் பிரமராயன் ” என்ற பட்டத்தையும் வழங்கநார்.  திருவாதவூரர் அரசாங்கத்தை நன்கு நடத்தி வந்ததர்கிடையில் சிவபக்தியில் ஆழ்ந்து முழ்குவாராயினர். பக்தி ஓங்குவதற்கு ஏற்ப உலக வியவகாரங்களில் இன்று அவரது மனது படிப்படியாக விலகுவதாஇற்று .

சோழ நாட்டுக் கடற்கரையில் நல்ல அரபிக்குதிரைகள் விற்பனைக்காக கொண்டு வந்து வைக்கப்பட்டிருப்பதை கேள்வியால் அறிந்த பாண்டியன் அவைகளை வாங்கி வரும்படி அமைச்சர் திருவாதவூரரை அனுப்பி வைத்தான். அவர் பரிவாரங்களுடன் போகும் வழியில் திருப்பெருந்துறையில் திருவருளே வடிவெடுத்திருந்த யானச்சாரியர்   ஒருவரால் ஆட்கொள்ளப் பெற்றார்.  பரம சிவனே அத்திருக்கோலத்தில் தோன்றி திருவாதவூரரை தமக்குஉரியவர் ஆக்கிக் கொண்டார் என்பது ஐதிகம். குதிரை வாங்குதற்கு தாம் எடுத்து சென்ற செல்வத்தை எல்லாம் அவர் சிவ சேவைகளில் செலவு செய்தார். அரசன் மறந்து விட்டுச் சிவனடியார் இணக்கதிலும் சிவன்யான குருசேவைலும் அவர் ஆனந்த பரவசமடைந்திருந்தார். இப்படி நிகழ்ந்து வந்தவையெல்லாம் பாண்டியன் காதுக்கும் எட்டின. அவன் சீற்றங்கொண்டு தென்னவன் பிரமராயனை கைபிடியாக கொண்டு வந்து சேர்க்க ஆணை பிறப்பித்தான். அந்த நடவடிக்கை தம்மை வந்து எதிர்க்கும் வரையில்  திருவாதவூரர் உலக நடைமுறையை மறந்த வராயிருந்தார். நெருக்கடி நேரில் வந்து தாக்கிய பொழுது தாம் செய்த பிழையை எண்ணி பரமாச்சாரியரிடம் அவர் பரிந்து பணிந்து, இனி தாம் செய்வது யாது என்று விண்ணப்பித்தார். ஆவணி மாதம் மூல நாள் அன்று குதிரைகள் வந்து சேருமென்று அரசனுக்கு சமாதானம் சொல்லி அமைதியுர்ரிருப்பாயாக என்று பரமனும் அனுக்கிரகம் செய்து தமது பக்தனை அனுப்பி வைத்தார்.

………தொடரும்

திருசிற்றம்பலம் !

உங்கள்

Advertisements
 

2 Responses to “திருவாசகம்”

 1. Manickam Says:

  திருவாத வூரர் சைவ சமயத்தில் பிறந்து சைவம் செழிக்க பணியாற்றியவர்.
  அவருக்கு ஏன் பிராமண வேடம்? அறிவற்ற சில மடையர்கள் சிவ தொண்டர்களை
  ஓவியமாக வரையும் போது ஏன் இப்படி அவர்களை பிராமணகளாகவே காட்டுகின்றனர்?
  முதலில் படத்தில் இருக்கும் பூணூலை அகற்றுங்கள்.
  சைவர்கள் எவருக்கும் பூணூல் அணியும் பழக்கம் வழக்கம் இல்லைதானே !?

  • rjpmguru Says:

   அன்பு நண்பரே !
   வணக்கம் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
   மாற்றிவிட்டேன் மாணிக்கவாசகர் படத்தை……….
   வரலாறு மிக முக்கியம் நண்பரே !


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s