Rjpmguru's Blog

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே !!!

திருவாசகம்-4 August 23, 2010

Filed under: Uncategorized — செந்தில்குரு பூசாரி @ 1:34 PM

குருநாதசுவாமி துணை 
அன்பு நண்பர்களே !
                    வணக்கம் ! வெகு  நாட்களுக்கு பிறகு திரும்ப எழுத ஆரம்பிக்கேறேன். உங்களின் ஆதரவு எப்பொழுதும் எனக்கு வேணும். உங்களுக்கு புடிச்சு இருந்த உங்க கருத்தை சொல்லுங்க…….
 
மாணிக்கவாசகர் அருளிய 
 திருவாசகம் 
 
திருசிற்றம்பலம்   
 
நூல் அமைப்பு ஆரம்பம்….
 
                          திருவாசகம் ஐம்பத்தொரு திருப்பதிகங்களுடன் திகழ்கிறது. அவைகளில் அடங்கியுள்ள பாடல்களின் தொகை அறுநூற்று ஐம்பத்தாறு. நூலில்  அடங்கியுள்ள பதிகங்களுள் பலவற்றை நாம் இடம் மாற்றியமைத்தால் இழுக்கு ஒன்றும் வாராது. ஏனென்றால் ஏதேனும் ஒரு தனி விஷயத்தை ஆராய்ச்சி செய்யவோ, படிப்படியாக அதை விளக்கிக்கொண்டு போவதர்காகவோ இந்நூல் முழுதும் முறைவைத்து அமைக்கப்படவில்லை. ஆயினும் அப்பதிகங்கள் அறவே தாறுமாறாகக் கலங்கிக் கிடக்கின்றனவென்று இயம்புதற்கும் இடம்மில்லை. சிவபுராணம் முதன்மை பெறுவது முறையே. தத்துவ விளக்கத்தில் அது அலைசிறந்து நிற்கிறது. அதைத் தொடர்ந்து வரும் மூன்று அகவல்களும் முறையாக இடம் பெற்றிருக்கின்றன. சாதனங்களின் சீரிய பகுதிகள் திருச்சதகத்தில் அடங்கியிருக்கின்றன. அவைகள் தத்துவ விளக்கத்தைத் தொடர்ந்து வருவது தகும். நீத்தல் விண்ணப்பம் அதன் பின் வருவதிலும் பொருள் புதைந்திருக்கிறது. ஏனைய பதிகங்களோல்லாம் எப்படி வேண்டுமானுலும் இடம் வகிக்கலாம்.
 
                        திருவாசகத்தின் அமைப்பை ஊர் உயர்ந்த மழைத் தொடரின் முடிமீது நடந்து போவதோடு ஒப்பிடலாம். நீண்ட மலைத்தொடரின் முடி ஒரே ஒப்பமாயிருப்பதில்லை. செங்குத்தான சிகரங்களும் தாழ்வுற்ற மழைப் பகுதிகளும் மாறிமாறி வந்து கொண்டிருக்கின்றன. மலையின் முதுகில் மேடும் பள்ளமும் பின்னிப் பின்னிப் பொலிவது இயற்கையின் கூறு எனலாம். திருவாசகத்தில் சிவபுராணம் மகாமேரு போன்று ஒரே செங்குத்தாயிருக்கேறது. அதைப்  பூலோகக் கயிலாயம் எனலாம். கிட்டத்தட்ட அதே உயரத்தில் இருக்கின்றன மற்ற முன்று அகவல்களும் பின்பு மலைத் தொடர்பு படிப்படியாக கீழே வருகிறது. அதில்  ஏறுவதும் கீழே இறங்குவதும் மாறி மாற்றி நிகழ்கின்றன. மனிதனுடைய ஆத்ம சாதனமும்  நிகழ்கிறது. திருவாசகத்தின் இறுதிப் பகுதி திரும்பவும் மேல் நோக்கிப் போகிறது. சீவ உபாதி ஒலித்தல் என்னும் திருப்படை ஆட்சிப் பதிகம் துவக்கத்தில் இருக்கிற சிவபுராணத்துக்கு நிகராக உயர்நிலை யொய்துகிறது. அதை அத்வைத சித்தி என்று இயம்புவது முறை. முடிவில் ஆனந்த மாலையும் அச்சோப்பதிகமும் கீழிறங்கி வருவனவாகின்றன.  
                                                                                                                                                                    ….. தொடரும்.
திருசிற்றம்பலம்.
 
 
 குருநாதர் அருள் பணியில் 
உங்கள் 
 
செந்தில்குரு
குருநாதன் கோவில் பூசாரி.
ராஜபாளையம்.
Advertisements
 

திருவாசகம் – 3 May 28, 2010

Filed under: திருவாசகம் — செந்தில்குரு பூசாரி @ 11:40 PM
Tags:

குருநாதசுவாமி துணை
அன்பு நண்பர்களே !
வணக்கம் ! ரொம்ப நாட்களுக்கு பிறகு திரும்ப திருவாசகம் எழுத ஆரம்பிக்கேறேன். உங்களின் ஆதரவு எப்பொழுதும் எனக்கு வேணும். உங்களுக்கு புடிச்சு இருந்த உங்க கருத்தை சொல்லுங்க…….
மாணிக்கவாசகர் அருளிய

திருவாசகம்

திருசிற்றம்பலம்
வாதவூரர் வரலாறு தொடர்ச்சி…

துறவறம் பூண்டு சிவநெறியிலே தீவிரமாகச் சொல்லுவதற்கான வாய்ப்பை வழங்கிய திருவருள் விலாசத்தைத் திருவாதவூரர் பெரிதும் வியந்தார். இனம் பிரிந்த மான் தன் இனத்தை நாடி ஓடுவது போன்று அவர் திருப்பெருந்துறையைச் சென்றடைந்தார். அங்குக் குருந்த மரத்தடியில் குருநாதரும் சிவனடியார் திருக்குட்டமும் பழையபடி வீற்றிருந்தது அடிகளுக்கு அளவில்லாத ஆனந்தத்தை ஊட்டியது. ஆத்மசாதகன் ஒருவனுக்கு வாய்க்கிற வைப்புகளுள் தலைசிறந்தவை இரண்டு. தனது அருள் குருவின் சந்நிதி சார்ந்து, அவரோடு சிறிது காலம் இணங்கி வாழ்ந்திருப்பது முதலாயது: நல்லார் இணக்கம் அல்லது ஷத்ஷங்கம் அதற்கு அடுத்தபடியானது. பெறுதற்கு அறிய அவ்விரண்டு அருள் பேறுகளும் வாதவூரருக்கு வேண்டியவாறு வாய்த்தன. அதனால் அவரோது ஆத்மசாதன முயற்சியானது மாறது முற்றுபெறுவதாயிற்று.

சிஷ்யன் முற்றிலும் பரிபக்குவம் அடைந்தான பிறகு குரு அவனை விட்டுப் பிரிவது முறை. அக்கோட்பாட்டுக்கு ஒப்ப அந்தணனாய் வந்து அடிகளை ஆட்கொண்ட பெருமான் மறைந்தருளினார். சில காலத்துக்குப் பிறகு சிவனடியார்களும் தங்களது யதாஷ்தானமாகிய திருக்கயிலைக்குத் திரும்புவாராயினர். குருநாதர் ஆணைப்படி திருவாதவூரர் உலகத்தவருக்கு பக்தி ஞான கயிங்கரியம் செய்யக் கடமைப்பட்டிருந்தார். அதன் பொருட்டு சிவ ஸ்தலங்கள் பலவற்றிற்கு அவர் விஜயம் செய்தார். தமது இறுதிக் காலத்தை அவர் சிதம்பரத்தில் கழித்து, சிவ சொருபத்தில் இரண்டறக் கலந்தார். அவருடைய திருப் பாடல்களுக்கு திருவாசகம் என்னும் பெயரும் அவருக்கு மாணிக்கவாசகர் என்ற திருநாமமும் அமைந்தது முற்றிலும் பொருத்தமாம்.

மனிதன் ஒருவன் ஏதேனும் ஒரு துறையில் நிபுணன் ஆனால் அவன் அத்துறைக்கு ராஜன் ஆகிறான். மாணிக்கவாசகர் எத்தகைய ராஜன் என்பதை நாம் அறிந்திருப்பது அவசியம். பாண்டியனுக்கு அமைச்சராய் அமர்ந்து அறிய முறையில் அரசாட்சி புரிந்ததினால் அவர் புவிராஜனாய் விளங்கியது வெளிப்படை பரம்பொருளே போன்று என்றும் பொன்றாத திருவாசகம் என்னும் பாரமார்த்திகக் கவிதையைப் பாரில் உள்ளோர்க்கு வழங்கியிருப்பதால் அவர் கவிராஜன் ஆகிறார். இனி அவர் வாழ்ந்த பாரமார்த்திகப் பெருவாழ்வு அவரைத் தவராஜன் ஆக்கியிருக்கிறது. பெறுதற்கு அறிய பராபக்தியைப் பெற்றதனால் அவர் பக்தராஜனாக இலங்குகிறார். இத்தனைச் சிறப்புக்களையும் ஒருங்கே உடைத்திருக்கும் மாணிக்கவாசகர் நடராஜனுக்கு உரியவர் ஆனார்.

முற்றும்.

திருசிற்றம்பலம்

திருவாசக நூல் அமைப்பு  பற்றிய சிறப்பை அடுத்த பதிவில் காண்போம்.

கடவுளின் அருள் பணியில்

உங்கள்

 

மே தின நல்வாழ்த்துக்கள் April 30, 2010

Filed under: நண்பர்களுக்காக,Uncategorized — செந்தில்குரு பூசாரி @ 11:25 PM
Tags:

மே தின நல்வாழ்த்துக்கள்

என்ன நண்பர்களே நலமா !

என்ன மாதிரி விடிய விடிய உக்காந்து தட்டச்சு செய்து (நம்புங்கப்ப !)  பதிவு போடுற நண்பர்களுக்கும், அந்த படிக்குற நண்பர்களுக்கும் எனது மே தின நல்வாழ்த்துக்கள்.

உங்கள்

 

திருவாசகம் – 2

Filed under: திருவாசகம் — செந்தில்குரு பூசாரி @ 10:53 PM
Tags:

குருநாதசுவாமி துணை

அருளிய
திருவாசகம்
திருசிற்றம்பலம்

வாதவூரர் வரலாறு தொடர்ச்சி…
திருவாதவூரரது சாதாரண பக்தியானது துன்பக்களில் பராபக்தியாகப் பரின்னமித்து வந்ததர்கிடையில் இறைவனது திருவருளால் இன்னுமொரூ நிகழ்ச்சி நேர்வதாயிற்று. வைகையாற்றில் நீர்பெருக்கெடுத்துக் கரைஒரமிருக்கும் வீடுகளை எல்லாம் அரித்துக் காண்டுபோம் அறிகுறிகள் தென்பட்டன. பாண்டிமன்னன் அதை நேரில் பார்வையிட்டு உத்தரவு ஒன்று பிறப்பித்தான். அதன் படி வீட்டுக்கு ஓர் ஆள் கூடையுடனும் மண்வெட்டியுடனும் வேலைக்கு வந்து அணை கட்ட வேண்டியதாயிற்று. சிவ பக்தி மிகப் பூண்டிருந்த வந்தி என்னும் பிட்டு வாணிச்சி ஒருத்திக்கு ஆள் கிடையாம போகவே அவள் இறைவன் சொக்கநாதரிடம் தன குறையை முறையிட்டாள். பின்பு கூலியாளும் ஒருவன் தோன்றி வந்து முன் கூலியாகப் பிட்டு ஏற்று உண்டு விட்டு வேலைக்குப் போனான். அப்படிப் போனவன் மண்ணை  வெட்டிப்போடுதலில் தன பகுதியைச் செய்து முடிக்காது விளையாடி வீண்பொழுது போக்கிக் கொண்டிருந்தான். அதை காணலுற்ற கண்காணிப்பாளன் அக்கூலியாளின் கூத்தாட்டத்தைப் பார்த்து பாண்டியனிடம் தெரிவித்தான். மன்னனும் பிரம்பால் அவன் முதுகில் ஓங்கி அடித்தான். அவ்வடியானது பிரபஞ்ச எங்கும் உள்ள உயிர்கள் அனைத்தின் மீதும் விழுந்தது ! அடி கொடுத்த மதுரை வேந்தனும் தன் பிரம்பு அடியைத் தானே உண்டு வருந்தினான். கூலி ஆளோ மாயமாய் மறைந்து போய் விட்டான்.!

மனிதன் தெய்வத்தோடு வைக்கிற இணக்கம் எத்தகையதாயினும் அது நலத்தையே நல்குகிறது. பாண்டியன் செயல் அதற்கு அறிகுறியாகும். அடியுண்ட அரசனுக்கு திடீரென்று நல்லறிவு பிறந்தது. தான் தெளிவடைந்ததைக் குறித்து அவன் திருவாதவூரரிடம் போய் கூருவானாயிணன் : “என் சொத்து என்று நான் எதை கருதினேனோ அது உண்மையில் சிவன் சொத்து. தாம் அதை சிவசேவையில் செலவழித்தது முறையே. ஈசன் எல்லாம் வல்லவன். அவன் நரியை பரியாக்குவான் ; பரியை நரியாக்குவான். குதிரையின் மீது மிகைப்பட்ட பற்றுதல் வைக்க வேண்டாமென்று அவன் எனக்கு பாடம் புக்ட்டியுள்ளான். தம் பொருட்டு சிவன் குதிரை சேவகனாய் வந்து எனக்கு காட்சி கொடுத்தான். தம் பொருட்டும், பிட்டு வாணிச்சியின் பொருட்டும் அவன் கூலி ஆளாய் வந்து மண் சுமந்து இந்த பாபியோனிடம் பிரம்பால் அடியுண்டான். அவன் பக்தவத்க்சலன், அடியார்க்கு எளியவன். உமது நல்லிணக்கத்தால் நான் இப்பொழுது சிவபக்தன் ஆனேன். நான் தமக்குச் செய்யக்கிடப்பது யாதோ? ” இப்படி அரசன் விண்ணப்பிப்பதை கேட்ட திருவாதவூரர் தாம் துறவறம் பூண்டு வெளியோக விரும்பியதாகத் தெரிவித்தார். அரசனும் அன்போடு அதற்கு ஆதரவு கொடுத்து அவரைச் சிவனடியாராகும்படி அனுப்பி வைத்தான்.

திருசிற்றம்பலம்
………தொடரும்
உங்கள்
 

திருவாசகம் – 1 April 22, 2010

Filed under: திருவாசகம் — செந்தில்குரு பூசாரி @ 11:38 PM
Tags:

குருநாதசுவாமி துணை

அருளிய

திருவாசகம்

திருசிற்றம்பலம் !

வாதவூரர் வரலாறு தொடர்ச்சி…

ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேருமென்று வாதவூரர் நேரில் சொன்னதைக்கேட்டு பாண்டியன் தனது ஐயத்தை அகற்றினன். ஆனால் திருப்பெருந்துறையில் குதுரைஎன்றும் காணப் பெறவில்லை என்று ஒற்றர் வாயிலாக அறியவந்த அரசன் சீற்றங்கொண்டான். குறித்த நாளென்று குதிரைச் சேவகன் ஒருவன் அவைகளைக் கொண்டுவந்து சேர்க்கவே அவன் மீண்டும் மகிழ் எய்தினான். பின்பு குதிரைகள் எல்லாம் தெய்வாதீனமாக நரிகளாக மாறி மறைய அரசனுக்கு அளவில்லாத ஆத்திரம் உண்டாயிற்று. இப்படி மாறி மாறி அமைந்துவந்த பாண்டியனது மனப்பாங்கை ஒட்டி திருவாதவூரருக்கு போற்றுதலும் தண்டனையும் மாறி மாற்றி வருவனவாயின. பக்தியில் ஆழ்ந்து ஈடுபடுகிற ஒருவருக்கு உலக வாழ்வில் உண்டாகும் இன்ப துன்பங்கள் அவரது பக்தியைக் கலைத்து விடுவதில்லை. உலகத்தவருடைய போற்றுதலை அவர் பொருள்படுத்துவதில்லை. அவர்கள் விளைவிக்கும் துன்பம் பக்தனது பக்தியை வளர்க்கிறது. தீயிலிட்டு உருக்கும் அளவு பொன் ஒளி விசுவது போன்று இன்னல்கள் அதிகரிக்குமளவு பக்தியானது தீவிர பக்தியாக மாறுகிறது. இவ்வுண்மையைத் திருவாதவூரர் முலம் உலகத்தவருக்கு எடுத்துப் புகட்டு தற் பொருட்டே ஈசன் இங்கனம் திருவிளையாடல் பூண்டார் போலும்.

அரசாங்கக் காரியத்துக்காகக் கொடுத்த திரவியத்தை வேறு காரியத்துக்கு நெறிவழுவித் திருப்பியது முதல் குற்றம். குதிரை கொண்டுவருவது போன்று ஜாலவித்தை காட்டி நரிகளை நகருக்குள் ஏவியது இரண்டாவது குற்றம். இவைகளை முன்னிட்டுப் பாண்டியன் திருவதவூரர் மீது தீவிர நடவடிக்கை எடுத்து கொண்டான். அவரை சிறையிலிட்டு பல துன்பங்களுக்கு ஆளாக்கினான். ஆனால் அக்க்ஷ்டங்களுக்கிடையில் துவாதவூரர்ருடைய மனப்பான்மையோ முற்றிலும் மாற்றியமைவதாயிற்று. தாம் செய்ததெல்லாம் சிவசேவை. சிவசேவைக்கு என்றே மானுடப்பிறவி வைய்த்துள்ளது. தமக்குற்ற துன்பங்கள் எல்லாம் சிவன் செயல்.  ஆதலால் அவைகளை தாம் பொருள்படுத்த வேண்டும். அதற்கேற்ற தீவிர பக்தி தம்மிடத்துப் பெருக வேண்டும். பின்பு அந்த பக்தியும் தெய்வத்திடம் இருந்தே வருகிறது. ஆதலால் மாறாத பக்தியைத் தமக்குத் தந்தருள வேண்டும் என்று இறைவனிடம் அவர் இடையறாது இறைஞ்சி நின்றார்.

………தொடரும்

திருசிற்றம்பலம் !

உங்கள்


 

திருவாசகம் April 21, 2010

Filed under: திருவாசகம் — செந்தில்குரு பூசாரி @ 12:22 AM
Tags:

குருநாதசுவாமி துணை

அன்பு நண்பர்களே !

எனக்கு திருவாசகம் எழுதனும்னு நினைத்தேன். இப்போதான் அது நிறைவேரிருக்கு . எழுத ஆரம்பிச்சு இருக்கேன். உங்களின் ஆதரவு எப்பொழுதும் எனக்கு வேணும். உங்களுக்கு புடிச்சு இருந்த உங்க கருத்தை சொல்லுங்க…….

அருளிய

திருவாசகம்

திருசிற்றம்பலம் !

வாதவூரர் வரலாறு

மாணிக்கவாசகர் மதுரைக்கு பக்கத்தில் உள்ள திருவாதவூரில் பிறந்தார். ஆதலால் அவருக்கு திருவாதவூரர் என்னும் பெயர் அமைந்தது. அவருடைய கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் ஆகிய சிறப்புக்களை பற்றி கேள்விவுற்ற பாண்டி மன்னன் அவரை தன்னிடம் வர வழைத்து அவரை தனது மந்திரிமார்களில் ஒருவராக நியமித்து கொண்டான். மேலும் அவருடைய ஆட்சி திறமையை . கண்டு கொண்ட கோமகன் அவருக்கு ” தென்னவன் பிரமராயன் ” என்ற பட்டத்தையும் வழங்கநார்.  திருவாதவூரர் அரசாங்கத்தை நன்கு நடத்தி வந்ததர்கிடையில் சிவபக்தியில் ஆழ்ந்து முழ்குவாராயினர். பக்தி ஓங்குவதற்கு ஏற்ப உலக வியவகாரங்களில் இன்று அவரது மனது படிப்படியாக விலகுவதாஇற்று .

சோழ நாட்டுக் கடற்கரையில் நல்ல அரபிக்குதிரைகள் விற்பனைக்காக கொண்டு வந்து வைக்கப்பட்டிருப்பதை கேள்வியால் அறிந்த பாண்டியன் அவைகளை வாங்கி வரும்படி அமைச்சர் திருவாதவூரரை அனுப்பி வைத்தான். அவர் பரிவாரங்களுடன் போகும் வழியில் திருப்பெருந்துறையில் திருவருளே வடிவெடுத்திருந்த யானச்சாரியர்   ஒருவரால் ஆட்கொள்ளப் பெற்றார்.  பரம சிவனே அத்திருக்கோலத்தில் தோன்றி திருவாதவூரரை தமக்குஉரியவர் ஆக்கிக் கொண்டார் என்பது ஐதிகம். குதிரை வாங்குதற்கு தாம் எடுத்து சென்ற செல்வத்தை எல்லாம் அவர் சிவ சேவைகளில் செலவு செய்தார். அரசன் மறந்து விட்டுச் சிவனடியார் இணக்கதிலும் சிவன்யான குருசேவைலும் அவர் ஆனந்த பரவசமடைந்திருந்தார். இப்படி நிகழ்ந்து வந்தவையெல்லாம் பாண்டியன் காதுக்கும் எட்டின. அவன் சீற்றங்கொண்டு தென்னவன் பிரமராயனை கைபிடியாக கொண்டு வந்து சேர்க்க ஆணை பிறப்பித்தான். அந்த நடவடிக்கை தம்மை வந்து எதிர்க்கும் வரையில்  திருவாதவூரர் உலக நடைமுறையை மறந்த வராயிருந்தார். நெருக்கடி நேரில் வந்து தாக்கிய பொழுது தாம் செய்த பிழையை எண்ணி பரமாச்சாரியரிடம் அவர் பரிந்து பணிந்து, இனி தாம் செய்வது யாது என்று விண்ணப்பித்தார். ஆவணி மாதம் மூல நாள் அன்று குதிரைகள் வந்து சேருமென்று அரசனுக்கு சமாதானம் சொல்லி அமைதியுர்ரிருப்பாயாக என்று பரமனும் அனுக்கிரகம் செய்து தமது பக்தனை அனுப்பி வைத்தார்.

………தொடரும்

திருசிற்றம்பலம் !

உங்கள்

 

சன் குடும்பம் விருது வழங்கும் விழா April 16, 2010


நன்றி : தினகரன் நாளிதழ்